தமிழ்ப் பிரியன்
தமிழ்க் கடவுள்
Friday, July 8, 2011
Sunday, February 13, 2011
செம்மொழி
'செம்மொழி' (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்.
உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர்.
செம்மொழித் தகுதி
ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவையாய் இருக்கிறது.
இந்த இரு படைப்புகளைக் கொண்டே அந்த மொழி செம்மொழிகளாக அறிவிக்கப்படுகின்றன.
இலக்கியப் படைப்புகள்
ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது.
கலைப் படைப்புகள்
ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டிடக் கலை , சிற்பக் கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்.
உலகச் செம்மொழிகள்
இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.
தமிழ்
இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம், இலத்தீன் மொழிகள் போல் இந்திய வரலாற்றை அறிய தமிழ், சமஸ்கிருதம் மொழிகள் தேவையாக உள்ளது. தமிழின் செம்மொழித் தகுதிக்கு திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம் , சிலப்பதிகாரம் , மணிமேகலை , முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்றவை உள்ளன.
மனித வரலாறு
- 13.7 பில்லியன் ஆமு - உலகின் தோற்றம்
- 3.2 மில்லியன் ஆமு - லூசி - en:Lucy (Australopithecus)
- 1.9 மில்லியன் ஆமு - en:KNM ER 1813
- பழைய கற்காலம் - (2.5 மில்லியன் - 10,000 ஆமு)
- இடைக் கற்காலம் - (11,500 - 10,000 ஆமு)
- புதிய கற்காலம் - (10,000 கிமு - )
· வேளாண்மை
- செப்புக் காலம் - (3,300 கிமு - )
- பண்டை நாகரிகங்கள்
- கிபி 150 - கிபி 900 : மாயா நாகரிகம்
- 634 - 1453 : முஸ்லீம் படையெடுப்புகள் - en:Muslim conquests
- 1206 – 1368 - மொங்கோலியப் பேரரசு
- 1450 - அச்சிடல்
- 1543 - அறிவியல் புரட்சி
- 1583 - 1950 : பிரித்தானியப் பேரரசு
- 1750+ - தொழிற்புரட்சி
- 1750+ - இந்திய விடுதலை இயக்கம் - en:Indian independence movement
- 1775 - 1783 - அமெரிக்க புரட்சி
- 1789 - 1899 - பிரெஞ்சுப் புரட்சி
- 1880 - 1914 : en:Scramble for Africa
- 1858 - படிவளர்ச்சிக் கொள்கை
- 1870 - en:Germ theory of disease
- 1879 - மின் விளக்கு
- 1879 - தானுந்து
- 1898 - அமெரிக்கப் பேரரசு
- 1914 - 1918 : முதல் உலகப் போர்
- 1917 - ரஷ்யப் புரட்சி
- 1929 - 1939 : பெரும் பொருளியல் வீழ்ச்சி
- 1940+ - தகவல்புரட்சி
- 1939 - 1945 : இரண்டாம் உலகப் போர்
- 1945 - சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி
- 1945 - ஐக்கிய நாடுகள்
- 1945 - அரபு நாடுகள் கூட்டமைப்பு
- 1951 - ஐரோப்பிய ஒன்றியம்
- 1953 - டி.என்.எ அமைப்பு
- 1960+ - பசுமைப் புரட்சி
- 1966 - en:Moon landing
- 1990 - உலகளாவிய வலை
- 2000 - மனித மரபகராதித் திட்டம்
- 2001 - செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்
- 2002 - ஆபிரிக்க ஒன்றியம்
- 2004 - தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்
Subscribe to:
Posts (Atom)